வெகு விமர்சையாக திருவையாறு என்ற நிகழ்ச்சி கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்துகொள்ள இன்று ஆரம்பமாகியது. நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் சிகரம் மற்றும் சிறந்த மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர் இளங்கோ மாணிக்கவாசகர் அவர்கள் மிகவும் அசத்தலாக சிறப்பான வசன நடையில் சற்று வித்தியாசமாக தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக பிரபல நடன ஆசிரியை மற்றும் பல மாணவர்களை பாரத நாட்டியம் பழக வழிசமைத்த ஸ்ரீமதி நிரோதி பரராஜசிங்கம் அவர்கள் நேரடியாக காலத்தில் நின்று நேரம் சற்றும் தவறாமல் நகர்த்தியது விழாவின் வெற்றிக்கு வழிசமைத்தது என்றால் அது மிகையாகாது. மற்றும் சங்கீத வித்துவான் ஸ்ரீமதி பராசக்தி அவர்கள் தலைமைதாங்கி நிகழ்ச்சிகளை வரிசைக்கிரமமாக நகர்ந்துசெல்ல வித்திடடார்கள்.
மேலாக கனடாவின் புகழ் பூத்த மிருதங்க ஆசிரியர் வாசுதேவன் அவர்களும் நிகழ்ச்சியில் தயாரிப்பிலும் அரங்கேற்றுவதிலும் முன்னின்று உழைத்ததனை அவதானிக்க முடிந்தது. ஏராளமான ஊடகவியலார்கள் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சிகள் நாளையும் மற்றும் மருதினமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கவின் கலை பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதள்களும் கழுத்துப்பட்டி கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மாணவர்கள் மிகவும் சந்தோசத்துடன் தங்களுடைய சான்றிதல்களை பெற்றுக்கொண்டதனை அவதானிக்க முடிந்தது. பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் மங்கள விளக்கேற்றி வைக்க ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவைத்தனர்.
இவ்வாண்டும் நான்காம் முறையாக ரொறன்ரோவில் திருவையாறு நிகழ்ச்சியை 14-04-2017 அதாவது இன்றும் நாளையும் (15-04-2017 ) மற்றும் (16-04-2017 ) ஸ்காபரோவிலுள்ள கனடா கந்தசாமி கோவில் கலாச்சார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் முதல்நாள் நிகழ்வுகள் இனிதே நடந்தேறின. மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டு நடன மாணவர்களுக்கு தங்களது உற்சாகம் கலந்த சந்தோஷ இன்ப உணர்வுகளை வெளிக்காட்ட்னார்கள். . ரொறன்ரொவில் திருவையாறு -2017 விழாவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்களின் நடனம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், வீணை ஆகிய கவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற இருப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் சாதனை என்றே கூறலாம். கடந்த ஆண்டுகளை விட மிகக் கூடுதலான ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்கு கொள்ள இருப்பது இவ்வமைப்பினரின் சாதனை என்றே கூற வேண்டும். பரீட்சை எடுத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி மாணவர்களைக் கௌரவித்தல், கனடாவில் வாழும் அனைத்துக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், இளைய தலைமுறையினரிடையே கலை–பண்பாட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், அரங்கேற்றம் செய்த மாணவர்கள் தம் அதி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல்,Thiruvaiyaru in Toronro-11அறக்கட்டளை ஒன்னை ஏற்படுத்தி, கனடாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாடு பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குதல், கனடாவின் பல்கலாச்சார நிகழ்வுகளில் தமிழ்ப் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறச் செய்தல், சிறந்த கலைக் குழுவை உருவாக்கி உலகநாடுகளில் கலைப் பயணத்தை மேற் கொள்ளுதல் என்ற நோக்ககங்களைக் கொண்டதாக இவ்வமைப்பு இயங்கிவருகின்றது. கனடாவில் 20 ஆண்டுகள் கலைப் பணியாற்றிய ஆசிரியர்களும்,அவர்களிடம் அரங்கேற்றம் செய்தமுதல் மாணவர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர். இன்றைய நாளைய நிகழ்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு இசை மகான், சங்கீத இசைப்புயல், கர்னாடக யமான் என பலராலும் அழைக்கப்படுபவரும் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்வில் மிகவும் சிறப்பாக பாடியதற்காக பல முன்னணி பின்னணி பாடகர்களின் இசை கச்சேரிகளுக்கு சென்றபோது மிகவும் சிறப்பாக பாடி பலத்த கரகோசத்தினை பெற்றுக்கொண்டார்கள். மிகவும் சிறப்பான பட்டங்களை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள். அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு கௌரவங்கள் நாளையதினம் வழங்கப்படும்.
Tamilbc.ca
Langes, FCPA, FCGA