60வது மணிவிழா: இளையதம்பி விஜயகுமார் அவர்களின் மணிவிழா ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொண்ட ஓர் சிறப்பான விழாவாக இனிதே நடந்தேறியது. இளையதம்பி விஜயகுமார் அவர்கள் தாயகத்தில் வர்த்தகதுறை புங்குடுதுவு பழையமாணவர்சங்க ஆரம்பகால உறுப்பினர் பொருளாளர் நிர்வாக சபை உறுப்பினராக நீண்டகாலமாக இருந்தவர் சமய சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டவர் தமிழ்ப்பற்றாளர் .
விழாவில் பலர் பல்வேறுவிதமான கௌரவ பாராட்டுதல்களை கவிதைகள், பட்ட்ங்கள், சிறப்பு வாழ்த்து மடல்கள் என வழங்கி அவர்களினை கௌரவித்தார்கள். ஆன்மீக சைவ பணி தலைவர் சோம சச்சிதானந்தன் அவர்கள் நிகழ்வுகளை மிகவும் அசத்தலாக தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சிறப்பான இன்னிசை கச்சேரி நடைபெற்றது. சிறப்பான பாடகர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு வழிசமைத்தனர். குறிப்பாக இசையரசி என எல்லோராலும் அழைக்கப்படும் விதுஷாயினி பரமநாதன் பல சிறப்பான பாடல்களினை பாடி எல்லோரையும் மகிழ்வித்தார். பின்னணி இசையினை நியூயோர்க் சிவா அவர்கள் வழங்கினார்கள். தமிழ் பிசியின் சார்பாக இலங்கேஸ் அவர்கள் கனேடிய அரசாங்கத்தின் மற்றும் பிரம்டன் மாநகர முதல்வரின் சிறப்பான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.
Langes, FCPA, FCGA
Tamilbc.ca