Tamil Business Community

Connecting Tamil Business Leaders Around the World

  • Home
  • News

    “இசைப்பிரியங்கம்”

    Sithampara Kalai Mantram Dance Academy of Fine Arts

    “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி October 20, 2018

    நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்

  • Culture

    “இசைப்பிரியங்கம்”

    Sithampara Kalai Mantram Dance Academy of Fine Arts

    “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி October 20, 2018

    நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்

  • Tamil Business

    “இசைப்பிரியங்கம்”

    Sithampara Kalai Mantram Dance Academy of Fine Arts

    “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி October 20, 2018

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் (July 29 & 30) Markham Fairgrounds

  • Cinema

    1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு

    விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்

    இசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்

    `விவேகம்’ அதிவேகம்.

  • Events

    “இசைப்பிரியங்கம்”

    Sithampara Kalai Mantram Dance Academy of Fine Arts

    “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி October 20, 2018

    நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்

    Culture

    2018 Legends night was a huge success, Tamilbc chief editor declared on October 8, 2018

    DateOctober 8, 2018By tamilbc

    LEGENDS NIGHT 2018
    Tamilbc declared as a huge success.
    2018 Legends night was a huge success

    The Link Group was proudly presented an evening filled with entertainment like never seen before, with more than 20 international artists consisting of singers, dancers, actors and actresses, and a live manual orchestra headlined by the famous Padma Bhushan Dr. SP Balasubrahmanyam.

    இசையின் இமயம் என போற்றப்படும் என்றும் பழசை மறக்காத பிரபல பின்னணிப்பாடகர் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந் நிகழ்வுக்கான பின்னணி இசையினை, தமிழகத்தின் பிரபல ‘லக்ஸ்மன் சுருதி’ இசைக் குழுவின் கலைஞர்கள் வழங்கினார்கள். தமிழகத்தின் பிரபல பாடகர்களுடன் நமது கனேடிய ஈழத்து தமிழர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன் நின்றுவிடாது தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினார்கள். ஈழத்து பாடகர்கள் குறித்து எஸ் பி பாலா குறிப்பிடுகையில் இசை மீதான அவர்களது ஆர்வத்தினை வெளிப்படுத்துவதாக இருந்தது எனவும், தாய்நாட்டிலிருந்து பலதூரத்தில் வாழ்ந்திருந்த போதும் தமிழ்மொழி, கலை என்பவற்றின் மீதான அவர்களது ஈடுபாடு ஆச்சரியம் தருவதாகவும் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தபோது ரசிகர்கள் கரகோஷம் செய்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.

    2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக தமிழ் பிசி நிகழ்ச்சியினை நிகழ்ச்சியின் இறுதியில் பிரகடனப்படுத்தியது. இசையின் இமயம் என போற்றப்படும் என்றும் பழசை மறக்காத பிரபல பின்னணிப்பாடகர் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்அவர்களின் இசையின் 50 வருட பயணதின் ஓர் கொண்டாட்ட மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏராளமான கனேடிய ஈழத்து மண்ணின் வாசனை தழுவிய எமது கலைஞர்களை ஒருங்கிணைத்து தென் இந்திய கலைஞர்கள் அடங்கிய பெரியளவிலான குழுவினருடன் சேர்ந்து இசைத் திருவிழாவினை நடத்தினார்கள் என ரசிகர்கள் பலர் தமிழ் பிசியிடம் தெரிவித்தனர். நிகழ்ச்சியினை கனேடிய பிரபல வர்த்தகர் ராஜாராம் (ராஜா) “The Link Group” சார்பாக நடத்தியிருந்து பெருமை சேர்த்தார்கள். நிகழ்ச்சியினை மிகவும் சிறந்தமுறையில் ஒருங்கிணைப்பு செய்து ஓர் சங்கர் திரைப்படம் பார்த்த அதே இன்பம் கலந்த மகிச்சியுடன் அமர்ந்திருந்து பார்த்து ரசிக்க கடினமாக உழைத்து பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். ஏராளமான பின்னணிப்பாடகர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பாலா இனிமையான பாடல்களினை அடுத்தடுத்து பாடி எல்லோரையும் இன்ப வெள்ளத்தில் நனைய வைத்தனர்.

    குறிப்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பாடகர்கள் Dr. S.P. பாலசுப்ரமணியம், வி .பி . பிரசன்னா, எம் .மகாலிங்கம், நித்யஸ்ரீ கே .ஸியாத் , C.ராஜசேகர், சித்தாரா கிருஷ்ணகுமார், டம்மினி, எஸ். தான்யஸ்ரீ , ஜெஸிகா ஜூட் , எஸ் பிரம்யா, ஆர் தாமிர அவர்களை விட மா கா பா, ஆனந்த் கே சித்ரா, சந்தோஷ் மற்றும் அறிவிப்பாளர் சித்ரா ஆகியோருடன் ஏராளமான தென்னிந்திய இசை கலைஞர் அசத்தலாக இசை வழங்கி எல்லோரையும் மனம் நெகிழ வைத்தனர். நிகழ்ச்சியின் அதிபர் ராஜாராம் கலைஞர்களை பாராட்டி சிறப்பான கெளரவம் வழங்கினார்கள். நிகழ்வின் ஆரம்ப உரையினை அன்டன் அவர்கள் தங்களது சிறப்பான வசீகர குரலில் வழங்கியிருந்தார்கள். ஒரு சிறு தவறினை கூட விடுத்து மிகவும் சிறப்பான ஓர் அறிமுக உரையினை நிகழ்த்தியிருந்தார்கள். உரையின் இறுதியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் அன்டனை பார்த்து “உங்களது அழகான உச்சரிப்புடன் கூடிய செந்தமிழுக்கு நான் தலை சாய்கின்றேன்” என்று கூறியவேளை எனது கண்களில் ஆனந்த கண்ணீர் சொரிந்தது. தொடர்ந்து நகைச்சுவையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பல பாடல்களினை பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்கள். உரையில் நான் (எஸ் பி பாலா) சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பது கஷ்டம். கடவுளின் அனுக்கிரகம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் போன்றவற்றால் இன்னும் நான் பாடகராக நீடிக்கிறேன் என்கிறார். மேலும் சிறு வயதிலேயே பாடுவதில் தங்களுக்கு இஷ்டம் என்றும் பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து, ஜனகனமன பாடுவதற்கெல்லாம் தன்னைத்தான் அழைப்பார்கள் என தங்களது சிறுவயது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். முதல் சினிமா வாய்ப்பு கிடைத்த அனுபவம் பற்றி கூறும் போது சினிமாவில் முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில், ‘‘ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா’’ என்ற பாடலை பாட வாய்ப்பு கிடைத்தது என கண்ணீர் மல்க கூறியபோது எல்லோர் கண்களிலும் கண்ணீர் சொரிந்ததை அவதானித்தேன்.

    எம்.ஜி.ஆர். பெரிய நடிகர். அவர் படத்தில் பாடுவது எனக்கு பயமாக இருந்தது. அதோடு டி.எம்.சவுந்தரராஜன் பெயரை சொல்லி நண்பர்களும் என்னை பயமுறுத்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் உச்சத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே போட்டியும் நிலவியது. அவர்கள் படங்களில் எல்லா பாடல்களையும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடி வந்தார்.
    ‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என புன்னகை பூத்த சிரிப்புடன் கூறினார். தங்களது இசைப்பயணம் பற்றி குறிப்பிடுகையில் 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார் என்றும் தொடர்ந்து 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் என்றும் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர் என்பதை பெருமையுடன் தெரிவிக்காமல் சிறுமையாக தெரிவித்தபோது அவர்களின் பண்பு வெளிக்கொணர்ந்தது. இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது என்பதையும் கூறியபோது பலத்த கரகோஷம் ஆரம்பத்தில் ரசிகர்களினால் வழங்கப்பட்ட்து. நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். தங்களது 50 வருட இசைப்பயணத்தில் ஏட்படட சவால்கள் மற்றும் சாதனைகள் பற்றி குறிப்பிடுகையில் தாங்கள் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதாகவும் கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்கள். சங்கராபரணம் பாடலினை பாடி எல்லோரையும் மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றார்கள். ஓர் சிறந்த நிகழ்ச்சியினை கனடாவில் கொண்டாட நிகழ்வாக அரங்கேற்றம் செய்யும் அதிபர் ராஜாராம் அவர்களுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து வழங்கிய கபிலேஸ் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தார்கள். பாடகர் பிரசன்னா மற்றும் மகாலிங்கம் இருவரும் சிறப்பாக பல பாடல்களினை பாடி எல்லோரையும் மகிழ்வித்தனர்.

     

    குறிப்பாக பிரசன்னா அவர்கள் தாயகத்தில் ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் ஓர் இசை ஆல்பத்தில் தாங்கள் பாடியிருந்ததாகவும் கூறி தங்களது அனுபவத்தினை கூறியிருந்தார்கள். ஜெசிகா, தாமிரா மற்றும் ரம்யா ஆகியோரின் சிறப்பான பாடுகின்ற திறனை சுருதி இசைக்குழுவின் தலைவர் லக்ஸ்மன் பாராட்டி தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினார்கள். பாடகர் பிரசன்னா மற்றும் மலையாளபாடகி சித்தாரா ஆகியோர் கபிலேஸர் எழுதி இசை அமைத்த பாடல் ஒன்றினை பாடி எல்லோரையும் ஒருகணம் அதிர வைத்தார்கள். விழாவின் இறுதியில் ராஜாராம் மற்றும் கபிலேஸர் ஆகியோருக்கும் பங்குபற்றிய சகல கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவம் செய்யப்பட்ட்து. தமிழ் நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகள் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை 
    சந்தோசப்படுத்தியுள்ள குழுவினருக்கு ஓர் பிள்ளையார் சுழி. இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் 8000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி உள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு 1994–ம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் தொடர்ந்து 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்ததை இந்நேரத்தில் ஞாபகப்படுத்துவது சாலச்சிறந்ததாகும். வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பினும் மேடையில் எந்தவிதமான கரோக்கி, மைனஸ் ஒன் ட்ராக் போன்றவற்றை பயன்படுத்தாமல் 100 சதவீதம் எல்லா இசைக்கருவிகளையும் இசைத்துப் பாடும் இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு. திறமை வாய்ந்த பாடகர்களுடன் ஒசாவா கனடாவில் அசத்தலாக வழங்கி வரலாற்று சாதனை படைத்தார்கள். இசை ரசிகர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் இந்தத் இசை பயணம் அமைந்ததாக தமிழ் பிசியிடம் பலர் தெரிவித்தனர். குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்றவாறு பாடல்கள் இடம் பெற்றமை விழாவின் வெற்றியை பறைசாற்றியது.

     

    Langes, FCPA, FCGA
    Tamilbc.ca, Chief Editor

    • Related Posts
    • More Posts by tamilbc

    “இசைப்பிரியங்கம்”

    Culture

    Sithampara Kalai Mantram Dance Academy of Fine Arts

    Culture

    “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி October 20, 2018

    Culture

    நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்

    Culture

    Legends Night 2018 OCTOBER 07

    Culture

    நான் பார்த்ததுலயே ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் அவர்தான் – நித்யா மேனன்

    Culture

    “இசைப்பிரியங்கம்”

    Culture

    Sithampara Kalai Mantram Dance Academy of Fine Arts

    Culture

    “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி October 20, 2018

    Culture

    நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்

    Culture

    2018 Legends night was a huge success, Tamilbc chief editor declared on October 8, 2018

    Culture

    Legends Night 2018 OCTOBER 07

    Culture
    All posts by tamilbc
    • Home
    • News
    • Culture
    • Tamil Business
    • Cinema
    • Events
    Copyright © [2016] Tamil Business Community. All rights reserved.
    Powered by Newsfront and WordPress.
    Back to top
    Tamil Business Community

    Archives

    • October 2018
    • November 2017
    • October 2017
    • September 2017
    • August 2017
    • July 2017
    • June 2017
    • May 2017
    • April 2017
    • March 2017
    • February 2017
    • January 2017
    • December 2016
    • November 2016
    • October 2016
    • September 2016
    • August 2016
    • July 2016
    • June 2016
    • May 2016
      Copyright © [2016] Tamil Business Community. All rights reserved.
      Powered by Newsfront and WordPress.