சமகால தேர்க்கலை உலகு துதி பாடும் ஸ்தபதி சிந்தனைச்சிற்பி மட்டுவிலூர் கிருஸ்ணபிள்ளை கலாமோகன் அவர்களின் அங்குரார்ப்பண மணிவிழா வைபவத்துடன் அவர்களின் நாட்பது வருட கலைத்துறை சார்ந்த சேவையினை பாராட்டுமுகமாக ஓர் சிறப்பான பாராட்டுவிழா நேற்றைய தினம் கனடா ஸ்காபரோ பெரிய சிவன் கோவில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொண்ட சிறப்பான கௌரவ விழா என தமிழ் பிசியிடம் பலர் தெரிவித்திருந்தனர். விழாவின் ஆரம்ப நிகழ்வாக மாண்புமிகு கிருஸ்ணபிள்ளை கலாமோகன் அவர்கள் சிறப்பான முறையில் மங்களவாத்திய இசையுடன் விழாவின் அழகிய மண்டபத்திட்கு அழைத்துவரப்படடார்கள். விழாவின் பிரதம விருந்தினராக அறிஞர் சாமி அப்பாதுரை அவர்கள் கலந்துகொண்டு விழாவின் வெற்றிக்கு வழிசமைத்தார்கள். விஷேட விருந்தினர்களாக அரசியல் பிரமுகர் லோகன் கணபதிப்பிள்ளை, அரசியல் பிரமுகர் நீதான் ஷான், மற்றும் அரசியல் பிரமுகர் ஜிம் காரியானிஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான பாராட்டு உரையினை வழங்கியதுடன் கௌரவ சான்றிதழ்களையும் வழங்கி கிருஸ்ணபிள்ளை கலாமோகன் அவர்களை வாழ்த்தினார்கள். விழாவினை தமிழ் பிசியின் இயக்குனர் இலங்கேஸ் தருமலிங்கம் அவர்கள் தலைமைதாங்கி சிறப்பான முறையில் ஏராளமான விஷேட பிரதிநிதிகளை
உள்வாங்கியதுடன் நின்றுவிடாது, விழாவினை விறுவிறுப்பாக நகர்த்தும் நோக்குடன் ஏராளமான சிறப்பான இசை மற்றும் பரதநாட்டிய நடனங்களினை இணைத்து அதிலும் வெற்றிகண்டார்கள். பார்வையாளர்கள் விழாவின் இறுதியில் இந்த பாராட்டுவிழா இயக்குனர் திலகம் ஷங்கர் அவர்களின் ஓர் திரைப்படம் பார்த்த உணர்வினை வெளிப்படுத்தியதாக கூறியிருந்தார்கள். விழாவின் ஆரம்பத்தில் கிருஸ்ணபிள்ளை கலாமோகன் அவர்கள் தமிழர் கலாச்சார முறையின்படி மங்களவிளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்கள். லோகன் கணபதி அவர்களுக்கு இலங்கேஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்து கௌரவிப்பு வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து லோகன் கணபதி அவர்கள் கலாமோகன் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலர்மாலை அணிவித்து கௌரவிப்பு செய்தார்கள். அதன்பின்னர் பெரிய சிவன் கோவில் ஆலயத்தின் தர்மகர்த்தா கலாநிதி அடிகளார் விபுலானந்த அவர்கள் பூக்களினால் தயாரிக்கப்படட கிரீடம் அணிவித்து அவர்களை கௌரவித்தார்கள். அதன்பின்னர் கலாமோகன் அவர்களை ஊர்வலமாக மேடைநோக்கி அழைத்து சென்றார்கள். அதன்பின்னர் சங்கீத மாமேதை பராசக்தி விநாயகதேவராஜா அவர்களின் ஐந்து மாணவிகள் மிகவும் சிறப்பான முறையில் கனேடிய தேசியகீதம் மற்றும் தமிழ் வாழ்த்துப்பா ஆகிய இரண்டினையும் இறைபக்தி கலந்த சிறந்த குரல்வளத்தில் ராகம், சுருதி தவறாமல் பாடி விழாவின் ஆரம்பத்திட்கு வழிசமைத்தார்கள். அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்ட்து. சிதம்பர மன்ற நடன கல்லூரி மாணவிகள் பலர் பங்குபற்றி ஓர் சிறப்பான நாட்டிய நிகழ்வினை வழங்கி பலரினதும் பலத்த கரகோசத்தினை பெற்றுக்கொண்டார்கள். ஓர் சிறந்த புஸ்பாஞ்சலி நடனத்தினை நடன ஆசிரியை துவாரகா ரமணன் அவர்களின் மாணவிகள் பங்குபற்றி சிறப்பாக அசத்தலாக வழங்கி பண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் பலத்த கரகோசத்தினை பெற்றுக்கொண்டார்கள். காயத்திரி மருதூர் நடன ஆசிரியை மாணவி மாயா கிருஷ்ணன் அவர்கள் சிறப்பான சிவன் நடனம் ஆடி எல்லோரையும் வியக்க வைத்தார்கள். விழாவினை சிறப்பிக்குமுகமாக ஹம்சத்வனி சிங்கராயர் அவர்களின் ஏராளமான மாணவர்கள் பங்குபற்றி சிறப்பான வலையில், வீணை மற்றும் மிருதங்க கச்சேரியினை வழங்கி எல்லோரினதும் பலத்த பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். பாரதி கலைக்கூடம் மதிவாசன் அவர்களின் மாணவி மயூருதி தேவதாசன் அவர்கள் சிறப்பான திரை இசை பாடல்களினை பாடி எல்லோரையும் இன்பம் கலந்த சந்தோசத்தில் ரசிக்க வித்திடடார்கள். ஏராளமான பாராட்டு கவிதைகள், பேச்சுக்கள், கௌரவிப்பு கேடயங்கள், கௌரவிப்பு சான்றிதழ்கள் மற்றும் பல ஒன்றியங்கள், இந்துகுருமார்கள், ஏறினார்கள், சங்கத்தலைவர்கள் என பலரும்
கலாமோகனை பாராட்டி கௌரவிப்பு செய்தார்கள். ஏராளமான இந்து ஆலயங்கள் குறிப்பாக பெரிய சிவன் ஆலயம், கனடா கந்தசாமி கோவில், நல்லூர் கந்தன், மிசிசாகா ஜெயதுர்கா ஆலயம், வவுனியா முத்துமாரியம்மன் ஆலயம் என பல இந்து ஆலயங்களின் தலைவர்கள் நேரடியாக வருகை தந்ததுடன் மட்டுமின்றி கௌரவ கேடயங்களை வழங்கி கௌரவிப்பு செய்தார்கள். ஊடக தலைவர்கள் பலர் வருகை தந்து விழாவினை பெருமைப்படுத்தினார்கள். குறிப்பாக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், easy24news அதிபர் கிருபா கிருஷன், ஈழநாடு பத்திரிகையின் அதிபர் குலசிங்கம் பரமேஸ்வரன், கனேடிய தமிழ் தேசிய வானொலியின் உப அதிபர் தென் புலோலியூர்
கிருஷ்ணலிங்கம் என பலர் கலந்துகொண்டு கௌரவிப்பு கேடயங்கள் உட்பட சிறப்பான பேச்சுக்களையும் வழங்கினார்கள். விழாவின் இறுதியில் அடிகளார் அவர்கள் சிறப்பான கேடயங்கள் வழங்கி கௌரவிப்பு செய்தார்கள். விஷேடமாக அறிஞர் சாமி அப்பாதுரை அவர்கள் சிறப்பான பிரதம விருந்தினரின் உரையாற்றி எல்லோரையும் கவரச்செய்தார்கள். அதனைத் தொடர்ந்து கலாமோகன் அவர்கள் ஓர் சிறப்பான எட்புரையினை வழங்கியிருந்தார்கள். பலத்த கரகோசத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. கலாமோகன் அவர்கள் தங்களது உரையில் ஓர் சித்திரத் தேருக்கு இருக்க வேண்டிய முக்கியமான கூறுகளை அளவுப்பிரமாணங்களுக்கு அமைய எவ்வாறு தாங்கள் கடந்த காலங்களில் கையாண்டதாகவும், பல சித்திர தேர்களை இலங்கையில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களை உருவாக்கிய மாண்புமிகு கலாமோகன் கிருஷ்ணர் அவர்கள் கடந்த காலங்களில் தாங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் விளக்கியிருந்தார்கள். கலாமோகன் அவர்கள் பெரிய சிவன் கோவில் வெள்ளோட்ட மற்றும் பஞ்சரத பவனிவரும் திருவிழாவிலும் கலந்துகொள்வதற்காக கனடாவில்
தட்பொழுது தங்கியிருக்கின்றார்கள். கல்லும் உலோகமும் செங்கலும் மரமும், மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும், கண்ட சருக்கரையும் மெழுகும், என்றிவை, பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன கற்றுத்தேர்ந்த சிட்ப சிம்மரசர் மாண்புமிகு கலாமோகன் கிருஷ்ணர் அவர்களின் பல அழகிய சித்திரத்தேர்களினை உருவாக்கிய பல்லாண்டுகால சேவையினை பாராட்டி “சித்திரத்தேர் இமயம்” என்ற உயரிய விருதினை பெரிய சிவன் ஆலயத்தின் சார்பாக தமிழ் பிசி வழங்கியிருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய சிவன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவின் பஞ்சரத பவனி மிகவும் சிறப்பாக நடைபெற கலாமோகன் அவர்களின் கனடா வருகை வித்திட்ட்து. விழாவின் இறுதியில் கலைத்துறை ஆய்வாளர் கஜேந்திரன் சண்முகநாதன் அவர்கள் சிறப்பான கவிதை வடிவிலான கௌரவிப்பு பாராட்டுதல்களினை கலாமோகன் அவர்களுக்கு வழங்கி கௌரவிப்பு செய்தார்கள். விழாவிட்கு சிறப்பாக வருகை தந்திருந்த அறிஞர் சாமி அப்பாதுரை, அரசியல் பிரமுகர்கள் லோகன் கணபதி, நீதன் ஷான், ஜிம் காரியனிஸ், நடன ஆசிரியைகள் கௌரி பாபு, துவாரகா, உமா, காயத்திரி, ஹம்சத்வனி, நிகழ்வுகளில் பங்குபற்றிய சகல மாணவர்கள் மற்றும் விழாவினை வெற்றிவிழாவாக நடத்துவதட்குதவிய சகல தொண்டர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். சிரம் தாழ்த்திய நன்றிகளை முழுமையாக நிதி உதவி அளித்த வியாபார தலைவர்கள் அடிகளார், live 100 வியாபார அதிபர் ஸ்ரீதரன் துரைராஜா மற்றும் hertz rental முரளி சிவகுரு கூறுவதில் பெருமிதம் கொள்கின்றோம். விழாவின் வெற்றிக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்த சந்திரமோகன் கிருஷ்ணபிள்ளை குடும்பத்தினருக்கும், முழுமையான செலவில் சிறப்பான சுவையான இராப்போசன விருந்தினை வழங்கிய சிவம் சுப்பிரமணியம் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். இந்து ஆலயங்களில் வருகை தந்திருந்த முத்து சுப்பிரமணியம், பாலநந்தன குருக்கள், பாலகுமார் குருக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகை வந்திருந்த ஸ்ரீதரன், நாகதர்ஷினி, தனா மாணிக்கவாசகர், சோம சச்சிதானந்தம், ராஜ் சிவபதம், நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஏனையோருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Langes, FCPA, FCGA