இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பயணிகளிடம் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் இருந்துவந்த ஒரு பெண்ணையும், உடன்வந்த நபரையும் தீவிரமாக சோதனையிட்டபோது அவர்கள் இருவரும் சுமார் 2.7 கிலோ அளவிலான Heroinனை அவர்கள் மறைத்து கொண்டு வந்ததை போதைப்பொருள் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 54 வயது நபரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர்.