கனடாவின் பிரபல அரசியல்வாதி திரு.லோகன் கணபதி அவர்களின் நேரடி முயற்சியினால் ஈழத்தமிழர்களுக்கு முதல்தடவையாக கிடைத்த உலகரீதியிலான அங்கீகாரம்!
முதல்வரின் கனடா வருகையை சாத்தியமாக்கிய மாநகர சபை உறுப்பினர், சமூகத்தலைவர், பிரபல அரசியல்வாதி, மற்றும் 2017இல் நடைபெற்றிருக்கின்ற ஒண்டாரியோ மாகாணத்தின் தேர்தல் களத்தில் மார்க்கம் தோன்கில் தொகுதி கண்சவேட்டிவ் வேட்பாளருமான திரு. லோகன் அவர்களின் விடாமுயற்சியினாலேயே வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்கள். முல்லைத்தீவு நகரம் மார்க்கம் நகரத்தின் இணை நகரமாகின்றது என்பதை உறுதியாக்கும் வகையில் நேற்றைய தினம் (January 14, 2017) ஈழத்தமிழர்களின் ஓர் வரலாற்று சாதனையாக மார்க்கம் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் திரு லோகன் கணபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடுவது போல, மார்க்கம் நகர முதல்வர் மற்றும் வடமாகாண முதல்வர் ஆகியோர் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்விற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இந்த உலக வரலாற்றின் நிகழ்விற்கு தங்களது முழு ஆதரவினையும் வழங்கினார்கள். திரு. லோகன் கணபதி அவர்களின் அழைப்பின் பேரில் இந்த விவகாரம் இடம்பெற்றதற்கு உலகலாவியரீதியில் பேராதரவு குவிந்தவண்ணம் உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக இத் திட்டத்தில் பணியாற்றி வரும் திரு.லோகன் கணபதி அவர்கள் இந்த வருகைக்கான ஏற்பாடுகளை கடந்த ஒக்டோபர் மாதம் லண்டனில் முதலமைச்சரையும், அவரது பிரதம அதிகாரியையும் சந்ததித்து ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றய தினமும் (January 15, 2017) ஏராளமான கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Langes, FCPA. FCGA
Tamilbc.ca, Chief Editor
Tamil BC
Tamil Business Community