நேற்றைய தினம் இலங்கேஸ் அவர்கள் கனடிய நயினை நாகம்பாள் தேவஸ்தானத்திற்கு ஓர் தீடிர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்கள். அங்கு பக்தர்கள் கலந்துகொண்டு நவராத்திரியின் எட்டாம் நாள் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடியதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
ஆலயமானது மிகவும் சிறந்த முறையில் ஆலயத்தின் பொதுநிர்வாகத்தினால் நிர்வகிக்கப்பட்டுவருவது பாராட்டுதல்களுக்குரியதாகும். ஆலயத்தின் உபதலைவர் கருணாநிதி அவர்கள் அங்கு சகல நிர்வாக கட்டமைப்புடன் நின்றுவிடாது ஒரு தொண்டராக சகல பணிகளையும் செய்துகொண்டிருப்பதனை அவதானித்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
ஆலயத்தின் சிறப்பான பூஜைகளை ஆலயத்தின் பிரதம குருக்கள், மற்றும் சிவாச்சாரியார் திலகம் கிருபா குருக்கள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தியதை பார்த்து மட்டற்ற சந்தோசம் அடைந்தேன்.
பூஜையின் இறுதியில் சிறப்பான பலகார வகைகள் வழங்கப்படடன.
Langes, FCPA, FCGA
Tamilbc.ca