ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
வருகின்ற சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (July 29 & 30) அமைந்துள்ள Markham Fairgrounds , 10801 McCowan Rd, Markham, ON L3P 3J3 மிகப்பெரிய அரங்கத்தில் சிறப்பான இசை நிகழ்ச்சியுடன் நகைச்சுவை கலந்த நடன நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வியாபாரத்தலைவர் குகதாசன் தலைமையிலான குழுவினரின் தயாரிப்பில், நிதிசேகரிப்பு நிகழ்வாக (Markham Stouffville Hospital fund raising) இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. கனடாவின் புகழ் பூத்த நிறுவனங்களான Lyca TV, Imperial Buffet & Matrix Legal Services ஆகிய மூன்று நிறுவனங்களின் அனுசரணையுடன் நிகழ்ச்சிகள் அசத்தலாக நடைபெற ஒழுங்குகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளது. அறிவிக்கப்பட்டதன் உறுதிமொழிக்கிணங்க சகல பாடகர்கள், வாத்தியக்கலைனார்கள் மற்றும் நடிகர்கள் சகலரும் Torontoவில் கால் பதித்துள்ளார்கள்.
காலை பத்துமணிமுதல் Markham Fairgrounds திறந்துவைக்கப்படவுள்ளது. ஏராளமான வர்த்தக சாவடிகள், உணவு சாவடிகள், தாயக உணவு சாவடிகள், ஐஸ் கிறீம் சாவடிகள், சிறுவர்களுக்கான களியாட்ட அமைவிடங்கள் என ஏராளமான சந்தோசம் கலந்த இன்பத்தினை வழங்கக்கூடிய வகையில் தயார்படுத்தல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் பாடும் நிலா பாலசுப்ரமணியம் (SPB), கானா பாலா, நடிகை ஐஸ்வர்யா, பாடகர் சத்யபிரகாஷ், நடிகை கீர்த்தனா ,மலேசியா பாடகர் வில்லியம், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா, பாடகர் முகேஷ், பாடகி வந்தனாஸ்ரீ, மாப்பிளை சரவணன் மீனாட்சி, நடிகர் விதார்த், பாடகி சுர்முகி, பாடகர் ஷ்ரவன், பாடகர் நடிகர் ஷியாம் என ஏராளமான தமிழ்நாட்டு கலைனர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். நிகழ்ச்சிகள் யாவும் சரியான நேரத்திற்கு ஆரம்பமாகும். கோடைகாலத்தின் மிகப்பெரிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வாருங்கள். சூரியபகவானின் முழுத்தரிசனம். இன்பம், மகிழ்ச்சி, சந்தோசம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
.